தேசிய மரநடுகை சுற்றாடல் வேலைத்திட்டம் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு தேசிய மரநடுகை சுற்றாடல் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது..
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மரநடுகை சுற்றாடல் வேலைத்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் மரக்கன்றுகள் நாடும் நிகழ்வு நடைபெற்றது .
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ,மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் புவனேந்திரன் ,பிரதேச செயலாளர் வி.வாசுதேவன்,சமுர்த்தி கணக்காளர் , பஷீர் , முகாமைத்துவ பணிப்பாளர் பிறைசூடி ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ .சுதர்சன் ,சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பராமலிங்கம் , கிராம சேவையாளர் நிர்வாக உத்தியோகத்தர் ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை ‘தொனிப்பொருளில் 17 செப்டெம்பர் முதல் 23 செப்டெம்பர் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.