மட்டக்களப்பில் பயணக்கட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவி

0
307

கொரோனா அச்சம் காரணமாக அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மட்டக்களப்பு- செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

செங்கலடி புனித நிக்கொலஸ் ஆலயத்தில் வைத்து உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

பங்குத்தந்தை அருட்திரு ஜூட் குயின்டஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் டச்பார் தூய இன்னாசியார் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு யேசுசபை அடிகளார் லோரன்ஸ் லோகநாதன் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளைக் கையளித்தார்.

இதன்போது 40 குடும்பங்கள் பயணடைந்தனர்.