மட்டக்களப்பில் பெண்தலைமைத்துவ
குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

0
143

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது .

சேவா இண்டர் நேஸனல் பவுண்டேஸன் இலங்கை அமைப்பானது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் நாட்டில் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான பொருளாதார நிவாரண உதவிகளும் மற்றும் முன்பள்ளி சிறார்களின் கல்விக்கான உதவி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன .

இதன் கீழ் சேவா இண்டர் நேஸனல் பவுண்டேஸன் இலங்கை அமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தில் அறப்பணி செயல் திட்டங்களை முன்னெடுத்து வரும் ஆறுமுக நாவலர் அறப்பணித் திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலக பிரிவுகளில் பொருளாதாரத்தில்நலிவுற்ற பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான நிவாரண உதவி வழங்கும் திட்டங்களை முன்னெடுத்துள்ளதும் .

அதன் ஒரு செயல்பாடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுமார் 16 ஆயிரம் பெறுமதியான உலர்வுணவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன .

கிழக்குமாகாண இந்து ஸ்வயம் சேவக சங்க இணைப்பாளர் அருணாசலம் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற உலர்வுணவுகள் வழங்கும் நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷன் சுவாமி நீலமாதவ னந்தாஜி , ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய பிரதம குரு ஸ்ரீ சபரீச சைதன்ய , மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் , மண்முனை வடக்கு பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ. சுதர்சன் , மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர் ஹரிஹர ராஜ் , இந்து ஸ்வயம் சேவக சங்க அகில இலங்கை செயற்குழு உறுப்பினர் சி . நிரோஸன் ஜீ ஆகியோர் கலந்துகொண்டு உலர்வுணவுகள் பொதிகளை வழங்கி வைத்தனர்
இந்நிகழ்வில் ஆறுமுக நாவலர் அறப்பணித் திட்ட உறுப்பினர்கள் மற்றும் பெண்தலைமைத்துவ குடும்ப பெண்கள் என பலர் கலந்துகொண்டனர்