நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கனடா கல்விக்கான மேம்பாட்டு அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்விக்கான மேம்பாடு, பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவித்தொகை போன்ற பல்வேறு உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார நிலை காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர்வுணவுப் பொதிகள் வைக்கப்பட்டன.
