மட்டக்களப்பில் முன்னெடுத்த தொடர்
நடைப்பயணத்தின் 100 வது நாள் இன்று

0
180

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த நியாய தொடர் நடைப்பயணம் இன்றுடன் 100 வது நாட்களை எட்டியுள்ளது.

‘இன்னும் ஏன் நடக்கின்றோம் நியாயத்திற்காக’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு நகரில் அமைதி வழி நடைபயணம் தொடர்ச்சியாக இன்று முன்னெடுக்கப்பட்டதுடன் இன்று குறித்த நடைபயணம் 100 நாட்களை எட்டியுள்ளது.

நிம்மதியான வாழ்வே எமக்கு தேவை , இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையில் பசியின்றி ,பிணியின்றி ,கல்வி ,சுகாதாரம் ,என அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்பட நாட்டை மீட்டெடுக்க அமைதியான ஜனநாயக மாற்றத்திற்கான நியாய தொடர் நடைப்பயணம் மட்டக்களப்பு நகரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

‘இன்னும் ஏன் நடக்கின்றோம் நியாயத்திற்காக’ பயணத்தை முன்னிலைப்படுத்தி ‘எங்கள் எதிர்காலம் தன்னிறைவானதாகுக’ என்ற ஜனநாயகத்திற்கான நியாய தொடர் நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது