நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசப்வாஸ் பக்தி சபையின் ஏற்பாட்டில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியந்தீவு, கல்லடி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள குடும்பங்களின் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் இன்று வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசப்வாஸ் பக்தி சபை உறுப்பினர்களினால் இவ்வாறு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
