நாடளாவிய ரீதியிலான பயணத்தடை காரணமாக வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ச்சியான பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு மக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் நாளாந்தம் தொழில் புரியும் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு பனிச்சையடி கிராம சேவையாளர் பிரிவில் நாளாந்த தொழிலில் ஈடுபடுகின்ற குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் ஆலய நன்கொடையாளர்களின் நிதி உதவியில் ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் பங்குத் தந்தை அருட்திரு லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உலர்வுணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
