மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலும் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் போன்றோரின் கண்காணிப்பின் கீழ் சமுர்த்தி வங்கிகளுடாக கொடுப்பனவு வழங்கும் திட்டம் ஆரம்பமானது.
இன்போது கரவெட்டி, புதுமண்டபத்தடி ஆகிய இரு வங்கிகளுடாக வெளிக்கள உத்தியோகத்தர் மூலமாக இந் நிதி நேற்று முதல் வழங்கப்படுகிறது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கிராமங்கள் தோறும் வீதிகள் ஊடாக சென்று பணத்தை ஒப்படைக்கும் பணியில் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்த குடும்பங்களின் வாழ்வதாரத்தின் பொருட்டு இந்த நிதி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.