மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆடைத்தொழிற்சாலைகளில் தொழில்புரிவோருக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று காலை நடைபெற்றன.
மட்டக்களப்பு, ஊறணியில் உள்ள அமெரிக்கமிசன் மண்டபத்தில் இந்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.மயூரனின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு சுகாதார அதிகாரி டாக்டர் கே.கிரிசுதனின் வழிகாட்டலில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் சுமார் 600க்கும் மேற்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதாக பொதுச்சுகாதர பரிசோதகர்கள் தெரிவித்தனர்.