சமுர்த்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் சமுர்த்தி வங்கியில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் தொடர்பாகவும், ஒரு கூரையின் கீழ் வழங்கும் சமுர்த்தி சேவைகள் தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயித்தியமலை வடக்கு கிராமத்தில் இன்று இடம்பெற்றது
இதன்போது உன்னிச்சை, நெடியமடு, ஆயித்தியமலை வடக்கு, ஆயித்தியமலை தெற்கு, மகிழவட்டவான் நரிப்புல்தோட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் நிருவாக பிரதிநிதிகளுக்கு இவ் விழிப்பூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
சமுர்த்தி வங்கியின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாகவும், மக்களுக்கு நன்மை பயக்கும் புதிய மாற்றங்கள் தொடர்பாகவும், சமுர்த்தி நுண்நிதி திட்டத்தில் இணைந்துள்ள மக்களுக்கு நிதி சார் நிபுணத்துவம் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.