மட்டக்களப்பு ‘ஹெல்ப் எவர்’அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று மட்டக்களப்பு ஆரையம்பதியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் ஹெல்ப் ஹெவர் அமைப்பானது ‘வறுமையை ஒழித்து வளர்ச்சியை காண்போம் ‘ எனும் கருப்பொருளில் மாவட்டத்தில் சமூக பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு செயல்பாடாக ஹெல்ப் ஹெவர் அமைப்புடன் மட்டக்களப்பு எச்.என்ட்.டி தாதிய பாடசாலையுடன் இணைந்து இரத்ததான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஹெல்ப் எவர் அமைப்பின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் ஹரிஷாந், வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், ஹெல்ப் எவர் அமைப்பின் உறுப்பினர்கள், எச்.என்ட்.டி தாதிய பாடசாலை மாணவர்கள்,இளைஞர் ,யுவதிகள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.