மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் மாபெரும் சிரமதானம்

0
107

மட்டக்களப்பு இந்து கல்லூரியின் 78வது கல்லூரி தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் மாபெரும் சிரமமான பணி இன்று இடம்பெற்றது
கல்லூரி பழைய மாணவ சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் பகிரதன் தலைமையில் இடம்பெற்ற சிரமதான பணியில்,
கல்லூரி பழைய மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர் என பலர் கலந்து
கொண்டனர்.
விடுமுறைக்காக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் பெப்ரவரி 5ம் திகதி கற்றல் நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்படவுள்ள நிலையில்,
மாணவர்களின் சுகாதாரம் ,பாதுகாப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையுடன் கல்லூரியின் 78வது கல்லூரி தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக
இச் சிரமதானப் பணி ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.