மட்டக்களப்பு இளைஞர்கள் இருவர் இலங்கையின் கரையோர பிரதேசங்களுடாக சைக்கிளில் சுற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் கடலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த சைக்கிளோட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிரதேச இளைஞர்களான களுவாஞ்சிகுடி பழைய மாணவரான அனாமிகன் குமாரசிங்கம் மற்றும் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி பழைய மாணவரான சஞ்ஜீவன் அமலநாதன் ஆகியோர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை துவிச்சக்கர வண்டியில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஓசோன் ரைட் எனும் கருப்பொருளில் இரண்டு சைக்கிள் ஓட்டிகளும் கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து 1,300 கிலோ மீட்டர்கள் தூரம் 11நாட்கள் கொண்ட நீண்ட சைக்கிள் சவாரியை ஆரம்பித்தனர்.
‘ஓசன் பயோமி’ அமைப்பின் கடல் சுற்றுப்புறச் சூழலையும் கடல் வளத்தையும் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இச் சைக்கிள் சவாரி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.