மட்டக்களப்பு உன்னிச்சைப் பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரிப்பு

0
97

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை இருநூறாவில் கிராமத்தில், காட்டு யானைகளின் அச்சுறுத்தலைச் சந்தித்து
வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
யானைகள் இரவு நேரங்களில் கிராமத்துக்குள் வருவதால் அச்சத்துடன் இரவு வேளையைக் கழிக்க நேர்வதாகக் கூறும் மக்கள்,
கடந்த ஒரு மாத காலத்துக்குள் யானைகளால் இரண்டு வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சிலர் இக் கிராமத்தில் உள்ள பள்ளிவாயலொன்றுக்குள் இரவு வேளைகளில் தஞ்சம் புகுவதாகவும், பள்ளிவாயல் வளாகத்திற்குள்ளும்
யானைகள் வந்து செல்வதால் அச்சமடைந்துள்ளனர்.
பயிர்களையும் யானைகள் சேதப்படுத்தி வருவதாகக் கூறும் மக்கள், மின்சார வேலியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.