மட்டக்களப்பு எருவில் கண்ணகி விளையாட்டு கழகத்திற்கு எருவில் சமூக அபிவிருத்தி ஒன்றியம் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை
வழங்கியுள்ளது.
சமூக சேவகர் வசீகரனிடம் எருவில் கண்ணகி விளையாட்டு கழகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய சீருடை மற்றும் பாதணிகளை எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியம் வழங்கியது.
சீருடை மற்றும் பாதணிகளை தமது கழகத்திற்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்த சமூகசேவகர் வசீகரனை கண்ணகி விளையாட்டு கழகம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது