மட்டக்களப்பு – ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் கல்வி கற்று, கடந்த 5 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளுக்குத்
தெரிவாகிய 237 மாணவர்களை கௌரவிக்கும் நேற்று இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எம்.மௌஜூத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா
கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் எம். அமீர், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜீத் உள்ளிட்ட பலரும்
கலந்து சிறப்பித்தனர்.
2018ம் ஆண்டு தொடக்கம் 2023 வரையான கடந்த 5 ஆண்டுகளில் அலிகார் தேசிய பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியற் கல்லூரிகளுக்கு
237 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்வுகள் நிகழ்வுகளும் இடம்பெற்றன.