மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலமாக நிலவுகின்ற இரத்த தட்டுப்பாட்டினையடுத்து ஏறாவூர் நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட
இரத்த தான முகாம் இன்று நடைபெற்றது.
நகர சபையின் செயலாளர் எம்எச்எம். ஹமீம் தலைமையில் நடைபெற்ற இரத்த தான முகாமில், நகர சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும்
பெரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் உத்தியாகத்தர்களும் இரத்த தான முகாமை வழி நடாத்தினர்.
ஐம்பதிற்கு மேற்பட்டவர்கள் இங்கு இரத்த தானம் செய்தனர்.
சமீபகாலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்தம் தட்டுப்பாடு நிலவுவதனால் பல நோயாளர்கள் உயிழந்துள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையினைக்கருத்திற்கொண்டே இரத்த தான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.