தீபாவழியை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் அமைதியான முறையிலும் சுகாதார வழிமுறையின் கீழும் நடைபெற்றது.
தீபாவளி கொண்டாட்டத்தையிட்டு ஏறாவூர் வரசித்தி விநாயகர் ஆலயத்திலும் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக மிகவும் குறைந்தளவு பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பூஜை வழிபாடுகளின்போது நாட்டில் இருந்து கொரனா வைரஸ் அழியவும் கொரனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பூரண சுகமடையவும் விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
கலந்துகொண்ட பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணி வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.