மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இருந்து சிரேஷ்ட பிரஜைகள் குழு, காத்தான்குடிக்கு ஆன்மீக சுற்றுப்பயணம்

0
105

மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிரேஷ்ட பிரஜைகள் குழு ஒன்று இன்று ஆன்மீக விஜயம் ஒன்றை மேற்கொண்டு
காத்தான்குடி பள்ளி வாயல்களுக்கு விஜயம் செய்தனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதிப் பங்களிப்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின்
ஒருங்கிணைப்பில் 60 சிரேஷ்ட பிரஜைகள் இந்த ஆணாமீக பயணத்தில் கலந்து கொண்டனர்
காத்தான்குடி அல் அக்க்ஷா ஜும்மா பள்ளிவாயலை பார்வையிட்ட இந்த குழுவினர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீ ராஜம்மா பள்ளிவாயலையும்
பார்வையிட்டனர்
ஓட்டமாவடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.நஜிமுதீன் தலைமையில் வருகை தந்த இந்த குழுவில், ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டிருந்தனர்