மட்டக்களப்பு ஓட்டமாவடியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கண்டனப் பேரணி இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்ய்யதுல் உலமா கல்குடா கிளையின் வழிகாட்டலில், கல்குடா முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து
ஜிம்ஆ தொழுகையின் பின்னர் கண்டனப் பேரணியினை மேற்கொண்டனர்.
ஓட்டமாவடி மணிக் கூட்டு சந்தி வரை கண்டன பேரணி பயணித்து, அங்கு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் வாசிக்கப்பட்டது.