மட்டக்களப்பு ஓமடியாமடு கிராமத்தில் கட்டுத்துவக்கினை
வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

0
174

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான வாகரை ஓமடியாமடு கிராமத்தில் கட்டுத்துவக்கினை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கைது
செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு சென்றவர்கள் 22 வயதுடைய நபரை கைது செய்ததுடன் அவரிடமிருந்த கட்டுத்துவக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேக நபரை வாழைச்சேனை பொலிசாரிடம் நீதி மன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதுடன் வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.