மட்டக்களப்பு காத்தான்கு மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு மல்ரிமீடியா உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தில் 1983ம் ஆண்டு தரம் 1ல் கல்வி கற்ற பழைய மாணவர்களினாலேயே இவ் உபகரணங்கள்
வழங்கப்பட்டன.
பாடசாலை அதிபர் திருமதி முஸர்ரபா ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.எம் ஹக்கீம் காத்தான்குடி
மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தில் 1983ம் ஆண்டு தரம் 1ல் கல்வி கற்ற பழைய மாணவர்கள் குழுவின் தலைவர் எம்.ஐ.ஏ.அறபாத், பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர்
ஆரிப், பொருளாளர் ஜலீல் உட்பட அதன் உறுப்பினர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
3 இலட்சம் ரூபா பெறுமதியான மல்ரி-மீடியா உபகரணங்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்திற்கு மல்ரிமீடியா உபகரணங்கள் கையளிப்பு