மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அன்பளிப்புச் செய்த ஒட்சிசன் கருவிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
அப்துல் ஜவாத் ஆலீம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிறுவனத்தின் தலைமை நிருவாக பொறுப்பாளரும் காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளருமான எம்.ஐ.எம்.ஜெஸீம், அதன் செயலாளர் மௌலவி கே.ஆர்.எம்.சஹ்லான் ரப்பாணி அப்துல் ஜவாத் ஆலீம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிறுவனத்தின் பிரதி நிதிகள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீரிடம் இந்த ஒக்சிஸன் கருவிகளை கையளித்தனர்.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமணவிடம் அப்துல் ஜவாத் ஆலீம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி விடுத்த வேண்டுகோளின் பேரில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு ஒக்சிஸன் கருவிகள் வழங்கப்பட்டதாக அப்துல் ஜவாத் ஆலீம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிறுவனத்தின் தலைமை நிருவாக பொறுப்பாளர் தெரிவித்தார்.