மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.
புதிய காத்தான்குடி வடக்கு,தெற்கு,கிழக்கு, ஹைராத் நகர், ரிஸ்வி நகர், ஜன்னத் மாவத்தை போன்ற பகுதிகளில்
வசிக்கும் மக்கள் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பலர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில், போக்குவரத்து நடவடிக்கைகள் சிரமத்திற்கு மத்தியில் முன்னெடுக்கப்படுவதை
அவதானிக்க முடிகிறது.