மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியில் ஆசிரியராக பிரதி அதிபராக மற்றும் அதிபராக கடமையாற்றி, ஓய்வு பெற்ற எஸ்.எச்.பிர்தௌஸின் கல்விப் பணியை பாராட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
காத்தான்குடி பீச் வே மண்டபத்தில், காத்தான்குடி மத்திய கல்லூரியில் 1986ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதரண தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், இந் நிகழ்வு இடம்பெற்றது
பழைய மாணவர் குழுவின் தலைவர் பொறியியலாளர், எம்.எம்.அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.அமீர் கலந்து கொண்டார்.
கல்லூரியில் முப்பது வருடங்களாக கல்விச்சேவைக்காக தன்னை அர்ப்பணித்த எஸ்.எச். பிர்தௌஸ் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
நிகழ்வில் உலமாக்கள், அதிபர்கள், முக்கியஸ்தர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.