உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையோரத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
கடற்கரையில் காணப்பட்ட குப்பைகள், கடதாசி கழிவுகள் என்பன அகற்றப்பட்டன.
கரையோரம் பேணல் மற்றும் கரையோர முகாமைத்துவ திணைக்கள ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை ஒழுங்குபடுத்தப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற சுத்திகரிப்பு நிகழ்வில், கரையோரம் பேணல் மற்றும் கரையோர முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர் மலர்விழி பாஸ்கரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் உட்பட கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.