அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் சங்கத்தின், மட்டக்களப்பு
காத்தான்குடிக் கிளையின் பொதுக் கூட்டம் நேற்று மாலை காத்தான்குடி சமுர்த்தி வங்கி வலய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் எம்.அன்சார் தலைமையில்
நடைபெற்ற இக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் சிறப்பு அதிதியாக
கலந்து கொண்டார்.
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் சங்கத்துக்கும் சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட அதன் உத்தியோகத்தர்களுக்குமிடையில் அன்மையில் இடம் பெற்ற சந்திப்பு தொடர்பில் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
சபையோரின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு, புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
தலைவராக எம்.எஸ்.எம்.நூர்தீன், செயலாளராக எம்.எச்.எம்.அன்வர், பொருளாளராக ஏ.எல்.எச்.எம்.இப்றாகீம், ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு காத்தான்குடியில், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க கூட்டம்