மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் சிசுபல நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி தரம் 5ல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், முகாமைத்துவ பணிப்பாளர் வாமதேவன் உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உறுப்பினர்களிடமிருந்து தெரிவு செய்யப்பட்ட தரம் 5ல் கல்வி கற்கும் 247 மாணவர்களுக்கு இதன் போது அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்காக காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 18 கிராம சேவையாளர் பிரிவுகளிலுமுள்ள சமுதாய அடிப்படை அமைப்புக்களில் இருந்து மாணவர்கள்
தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.