மட்டக்களப்பு காத்தான்குடி பதுறியா வித்தியாலய மாணவி, குண்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்!

0
142

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில், 14வயதுக்குட்பட்டவர்களுக்கான குண்டெறிதல் போட்டியில், வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்த, மட்டக்களப்பு
காத்தான்குடி பதுறியா வித்தியாலய மாணவி, மபாஸ் மிஷ்ரத் சீமா, பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார்.
மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
மாணவி,காத்தான்குடி பதுறியா வீதியிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் வை.எம்.ரிப்கான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி ஏ.ஜே.எம்.ஹக்கீம் உட்பட பாடசாலை சமூகத்தினர்
கலந்துகொண்டனர்