மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

0
116

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்பு
கவியரங்கு நடைபெற்றது.
காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்
வழி நடாத்தலில் கவியரங்கு இடம்பெற்றது.
கவிஞர் ஏ.எல்.நூன் ரஹீம் தலைமையில் நடைபெற்ற இக் கவியரங்கில் கவிஞர்கள் கவி பாடினர்.
காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் செயலாளர் பாத்திமா முஹம்மட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
முபீன் அஷ்ஷெய்ஹ் முகம்மட் ஜாபீர் நழீமி உட்பட இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து
கொண்டனர்.