மட்டக்களப்பு குசனார்மலைக்கு
சுவிஸ் தூதுவர் விஜயம்

0
324

மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் உள்ள வரலாற்றுசிறப்புமிக்க, தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள,
குசனார்மலைக்கு சுவிஸ் தூதுவர நேற்;று மாலை விஜயம் செய்தார்.
கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள சுவிஸ் தூதுவர் டொமிங்க் பேர்கிலர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
மாவட்டத்தில் தொல்லியல் செயலணி ஊடாக தமிழர்களின் பாரம்பரிய இடங்களை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்துவதற்கு முன்னெக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தூதுவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இந்த விஜயத்தினை அவர் முன்னெடுத்தார்.
குசனார்மலைக்கு வருதைந்த தூதுவரை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் வரவேற்றனர்.
மலையில் உள்ள முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் தூதுவருக்கு ஆசியும் வழங்கப்பட்டது.
குசனார்மலையின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அப்பகுதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் சுவிஸ் தூதுவர் கேட்டறிந்தார்.