மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் வலயக் கல்வி பணிப்பாளர் சிறீதரன் வழிகாட்டலில், டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், கோட்டைக்கல்லாறு மகா
வித்தியாலயத்திலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் செல்வராசா தலைமையில், பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் கஜானனின் வழிகாட்டலின்
கீழ் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், மாணவர்களுக்கு டெங்கு நுளம்பு தொடர்பான விழிப்புணர்வு
துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
சிரமதானப்பணியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலை சுற்றுச் சூழலை துப்பரவு செய்தமை குறிப்பிடத்தக்கது.