மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலக தைப்பொங்கல் விழா

0
171

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், கல்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஆலயங்கள், கிராமமட்ட சமூக அமைப்புக்கள்
இணைந்து நடாத்திய தைப்பொங்கல்விழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது.
பாசிக்குடா கடற்கரை விளையாட்டு முற்றத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில்
பொங்கல் விழா நடைபெற்றது.
கல்குடா மகா விஷ்ணு ஆலயத்திலிருந்து கலாசார பண்பாட்டு பவனி ஆரம்பமாகி நிகழ்வு நடைபெறும் இடத்தை சென்றடைந்ததும், பிரதான பொங்கல் பானையில் புத்தரிசியிட்டு
பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 12 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் பொங்கல் பொங்கினர்.
கோறளைப்பற்று பிரதேச அறநெறிப் பாடசாலைகள், கலைமன்றங்களை சேர்ந்த மாணவர்களின் கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
கல்குடா வலம்புரி மற்றும் வேளாங்கன்னி விளையாட்டு கழகங்களின் ஏற்பாட்டில் கலாசார பாரம்பரிய விளையாட்டுக்களான கரும்பு உடைத்தல், போர்த்தேங்காய் உடைத்தல், முதலான விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசில்களும், கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களை கௌரவிக்கும் வகையில்
சான்றிதழ்களும், பரிசுப்பொதிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன், கணக்காளர் ஜே.ஜோர்ச் ஆனந்தராஜ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன்,
நிர்வாக உத்தியோகத்தர் புனிதநாயகி ஜெயக்குமார், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.