மட்டக்களப்பு வந்தாறுமுலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சவுக்கடி கிராமத்தில் ஒன்றிணைந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சவுக்கடி பாரதி வித்யாலய முன்றலில் காலை 9 மணிமுதல் மாலை 3 வரை இடம்பெற்ற மருத்துவ முகாமில் மருத்துவ கற்கை மாணவர்களினால் தொற்று நோய்கள் தொற்றா நோய்கள் மற்றும் சமூகம் சார்ந்த சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக சமூகம் மற்றும் தொழிற்துறைகளை பல்கலைக்கழகத்தோடிணைக்கும் பிரிவின் ஒழுங்குபடுத்தலில் பிராந்திய சுகாதார வைத்ய பணிமனை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இணைந்து இம்மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர், பிராந்திய சுகாதார வைத்ய அதிகாரி, ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர், ஏறாவூர் பிரதேச வைத்திய அதிகாரி ஆகியோர் ஒன்றிணைந்து ஆரம்பித்துவைத்ததுடன் முகாமில் பல்கலைக்கழக பதிவாளர் நிதியாளர் இயக்குனர்கள் விரிவுரையாளர்கள் ரோட்டரி கழகத்தினர் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மருத்துவ முகாமிற்க்கான ஒழுங்கமைப்புக்களை கிராம உத்தியோகஸ்தர் தலைமையில் சவுக்கடி மத்தி, சவுக்கடி கிழக்கு, சிவபுரம் ஆகிய கிராமங்களின் கிராம அபிவிருத்திச்சங்கங்களும் சமுர்த்தி சங்கங்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
சவுக்கடி கிராமத்தை கிழக்குப்பல்கலைக்கழகம் தத்தெடுத்தது ஓர் மாதிரிக்கிரமமாக அபிவிருத்திசெய்ய திட்டமிட்டுள்ள நிலையில் அதன் முதல் அங்கமாக இம் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.