மட்டக்களப்பு டெங்கு ஒழிப்பு விசேட பிரிவினரால் புகை விசிறும் நடவடிக்கை

0
145

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை இவ்வருடத்திற்கான முதலாம் தவனைக்கான பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு மட்டக்களப்பு டெங்கு ஒழிப்பு விசேட பிரிவினரால் பாடசாலை வளாகங்களில் டெங்கு புகை விசிறும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணனின் வழிநடத்தலின கீழ் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மட்டடக்களப்பு மாவட்டத்தில தற்போது; நிலவும் சீரற்ற கால நிலைமை காரணமாக டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை சமுகத்தின் பாதுகாப்பை கருதிற் கொண்டு புகை விசிறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கொரோனா தாக்கத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு பாடசாலை நிர்வாகத்தினரால் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.