இலங்கை இராணுவ படை பிரிவின் 11 வது சிங்க ரெஜினமென்ட் படைப் பிரிவின், மட்டக்களப்பு சிங்க ரெஜினமென்ட் படையணியால், மட்டக்களப்பு
நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம், மட்டக்களப்பு கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ்,
11 வது சிங்க ரெஜினமென்ட் படைப் பிரிவு கட்டளை அதிகாரி தலைமையிலான படையணியினரால், மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் பிரதான வீதி பகுதியில்
சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, டெங்கு நுளம்புப் பெருக்கத்தைத் தடுக்கும் வகையிலான் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் பணியில், மட்டக்களப்பு சிங்க ரெஜினமென்ட் படையணி