மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலய கணிதபாட ஆசிரியர்களுக்கான செயலமர்வு

0
16

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில், ஆரம்பப்பிரிவிற்கு கணிதபாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு, பட்டிருப்பு ஆசிரிய மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்றது. வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில், ஆரம்பப்பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

செயலமர்வில் பிரதான வளவாளராக அம்பாறை தெஹியத்தகண்டி கலைமகள் வித்தியாலய அதிபர் சமன்பிரியதர்சன், உதவிக்கல்விப்பணிப்பாளர் சத்தியதாஸ், ஆசிரிய ஆலோசகர் சண்முகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.