மட்டக்களப்பு பார் வீதி பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி சடலமாக மீட்பு

0
224

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ பிரிவுக்குட்பட்ட பார் வீதி பகுதியில் உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கு அருகில் அவரது முச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள முச்சக்கரவண்டி சாரதி கருவப்பங்கேணி பகுதியை சேர்ந்த 2பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய மாசிலாமணி தர்மரட்ணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த முச்சக்கரவண்டி சாரதி மட்டக்களப்பு ரயில் நிலையத்தின் முன்னால் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றி வருவதாகவும் சம்பவ தினமான இன்றைய தினம் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு அதிகாலை 4 மணிக்கு வந்தடையும் ரயிலில் இருந்து வரும் பிரயாணிகளை ஏற்றி செல்வதற்காக இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டைவிட்டு முச்சக்கரவண்டியில் சென்ற நிலையிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.