மட்டக்களப்பு பாலமீன்மடு குழந்தை இயேசு ஆலய, கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாமொன்று,
ஆலய வாளகத்தில் இன்று நடைபெற்றது,
பாலமீன்மடு குழந்தை இயேசு ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
சமூக அபிவிருத்தியை நோக்காக கொண்டு முன்னெடுத்து வரும் செயற்றிட்டத்தின் கீழ், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளினால்
விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இனங்க, வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில், காத்தான்குடி பிரதேச வைத்தியசாலையின்
இரத்த வாங்கி பிரிவுடன் இணைந்து இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.
பாலமீன் மடு குழந்தை இயேசு ஆலய பங்கு தந்தை அருட்பணி மொருசன் ஹென்ரிக் தலைமையில் ஆலய பரிபாலன சபையினரின் அனுசரணையில் நடைபெற்ற இரத்தான
முகாமில், காத்தான்குடி பிரதேச வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவு வைத்திய அதிகாரி அலிமா ரஹமான் உட்பட்ட இரத்த வங்கிப் பிரிவினர் மற்றும்
இளைஞர்கள் யுவதிகள் என பலரும் இரத்தானம் வழங்கினர்.