‘இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் நெறிப்படுத்துனர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் சுழற்சி முறையில் 100 நாட்கள் செயல் முனைவு போராட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்ஒருகட்டமாக 13 நாள் செயல்முனைவான போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பெரிய புல்லுமலையில் இன்று நடைபெற்றது.
இன்று காலை பெரிய புல்லுமலை பிரதான வீதியில் ஒன்று கூடிய மக்கள் கையில் கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
; போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு ஊடகவியலார்களிடம் கையளிக்கப்பட்டது