மட்டக்களப்பு பொலிஸாரினால் தொற்றுநீக்கி திரவம் விசிறும் நடவடிக்கை

0
1096

மட்டக்களப்பு பொலிஸாரினால் தொற்றுநீக்கி திரவம் விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என 6 பேர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸாரினால் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதுடன், தொற்றுநீக்கி திரவம் விசிறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.