மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த பரிசோதனை

0
132

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ஆய்வு அறிக்கை பரிசோதனை
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
கடந்த நான்கு வருடங்களாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உள்ளக பொலிஸ் பரிசோதனை,
இன்றைய தினம் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார ஒழுங்கமைப்பில், பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான
தலைமையில் நடைபெற்ற ஆய்வு அறிக்கை பரிசோதனை நிகழ்வில், பிரதம அதிகாரியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்
யூ.என்.பி.லியனகே கலந்துகொண்டார்.
நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,
உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.இதேவேளை மட்டக்களப்பு பொலீஸ் நிலைய வளாகத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட பூங்கா, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது