மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பொங்கல் விழாக, கலாசார பிரதிபலிப்புக்களுடன் வெகு விமர்சையாக
இடம்பெற்றது.
தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்ட கிராமத்தில் உள்ள வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயத்தில் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன்
நிகழ்வு நடைபெற்றது.
பாரம்பரிய நெல்அறுவடை நிகழ்வும், பாரம்பரிய இசைக்கருவிகளின் இன்னியத்துடன் கலாசார நடைபவனியும்
நடைபெற்றது.
ஆலயங்களின் பொங்கல், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி என்பனவும் நடைபெற்றன.
இளைஞர் விவசாயதிட்ட கிராம மக்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும்
கலந்துகொண்டனர்.