மட்டக்களப்பு போரதீவுப்பற்றுப் பிரதேச அபிவிருத்திக்
குழுக் கூட்டம் வெல்லாவெளியில் நடைபெற்றது

0
177

மட்டக்களப்பு போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் வெல்லாவெளி கலாசார
மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதே செயலாளர் இராகுலநாயகியின் ஒருங்கிணைப்பில், பிரதேச ஒருக்கிணைப்புக்குழுத்
தலைவரும் இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரனின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயம், மீன்பிடி, வீடமைப்பு, மின்சாரம், கைத்தொழில்,பிரதேசத்தின் அபிவிருத்தி, மண்டூர் – குருமண்வெளி போக்குவரத்திற்காக
படகில் பயணிப்பவர்களிடம் பணமறவீடு செய்வது குறைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு
விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன்,அவற்றிற்கான ஆலோசனைகளும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், உள்ளிட்ட பலர்
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.