மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மாணவியை
பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

0
323

கிழக்கு மாகாணத்தின் சாதனையை முறியடித்த மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மாணவியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று கல்லூரியில் நடைபெற்றது .2022 ஆம் ஆண்டுக்கான இணைபாடவிதான செயல்பாட்டின் மாவட்ட மட்டம் மற்றும் மாகாண மட்டத்திற்காக நடாத்தப்பட்டு முடிவுற்ற போட்டிகளின் தரப்படுத்தலில் புள்ளி அடிப்படையில் மாகாண மட்டத்தின் சாதனையையும் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மகாஜன கல்லூரி ஐந்தாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் வளையத்திற்கு பெருமை சேர்த்துள்ளது

மாகாண மட்டத்தில் பாடசாலைகளிடையில் நடாத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் ஈட்டி எறிதல் ,பரிதிவட்டம் மற்றும் குண்டு எறிதல் ஆகிய மூன்று போட்டிகளில் பங்குபற்றி கிழக்கு மாகாணத்தின் சாதனையை முறியடித்த மகாஜன கல்லூரி மாணவி பேபி சாலினியையும் , மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்த்தின போட்டியில் பங்கு பற்றிய முதல் இடத்தினை பெற்ற கல்லூரி மாணவிகளையும் , மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட ஆங்கில மொழி போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவான மாணவிகளையும் ,மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் , பயிற்றுவிப்பாளர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் கே.அருமை ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது .

கல்வி வலயத்திற்கும் ,பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் கல்லூரி அதிபர் கே.அருமை ராஜா தலைமையில் கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பாடசாலை பழைய மாணவர்கள் என கலந்து சிறப்பித்தனர்