மட்டக்களப்பு மயிலவட்டவானில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

0
24

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலவட்டவான் பகுதியில் வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. மயிலவட்டவான் பாடசாலையின் அதிபர் திவ்யதேவ் விடுத்த வேண்டுகோளுக்கமைய இமயம் அமைப்பினால் 12 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்
வழங்கப்பட்டன.

லண்டன் இமயம் அமைப்பின் நிதியுதவியுடன் துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இன்று செங்கலடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இமயம் அமைப்பின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி வ.ஜீவானந்தம், பிரதேச சிறுவர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஹுஸைட், உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.