ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்ற பின்னர் அன்றைய அரசுக்கு எதிராக ஜேவிபியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து, அரசாங்கத்தினை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாத்ததாக
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி முன்னெடுத்துள்ள விசாரணைக் குழுவானது விசாரணைகளை முன்னெத்து குற்றவாளிகளை சட்டத்துக்கு முன்பாக
நிறுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கில் வீதி புனரமைப்பு,கால்வாயுடனான வீதிகள் புனரமைப்பு மற்றும் ஜெயந்திபுரத்தில் வெள்ள
அனர்த்தில் பாதிக்கப்படும் பகுதிகளில் வடிகான்கன் அமைப்புகளுக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையின் சுமார் 100மில்லியன் ரூபா செலவில் இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் பொறியியலாளர் எஸ்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்வேலைத்திட்டங்களின்
ஆரம்ப நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பொறியியலாளர் சித்திரா,இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரொஸ்மன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.