மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை புனரமைக்கப்படாத வீதிகளை புனரமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
2022ஆம் ஆண்டு மாநகரசபையின் ஒதுக்கீடுசெய்யப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் கறுவப்பங்கேணியில் வீதி புனரமைப்பு பணிகள் ;வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுவங்கேணி ஆறாம் வட்டாரத்தில் இரண்டு வீதிகள் இன்று தார் வீதிகளாக புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த வீதிகளை புனரமைப்பதற்காக மாநகரசபையினால் 25இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மாநகரசபை உறுப்பினர் சிவானந்தன் மேகராஜ் தெரிவித்தார்.
கறுவப்பங்கேணி 06ஆம் வட்டார உறுப்பினர் சிவானந்தன் மேகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி நாகராணி, பிரதேசத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான தீபாகரன்,முகுந்தன் உட்பட பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சிறி உட்பட பலர் கலந்துகொண்டனர்.