மட்டக்களப்பு மாவட்டத்தில் காலை பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை

0
129

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை காணப்பட்டதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதிகாலை தொடக்கம் காணப்பட்ட கடுமையான பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து மேற்கொள்வதில் சாரதிகள் கஸ்டங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகள் இன்று அதிகாலை தொடக்கம் பனியினால் சூழப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
மட்டக்களப்பு வாவிப்பகுதியும் பனியினால் மூடப்பட்டிருந்ததன் காரணமாக மீனவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.