மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டமானது மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு ஒன்றுதிரண்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி ஊடாக கல்லடி பாலம் வரை பேரணியாக முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர்களான எஸ் .கணேசமூர்த்தி , எச் எம். முஸ்தபா , மண்முனை பிரதேச சபை தவிசாளர் டி .தயானந்தன் ஆகியோர் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிரான கோஷங்களுடன் அரசுக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .